வாழைப்பூ பொரியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ – 1 கோப்பை
2. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
3. துவரம் பருப்பு – 3 மேசைக்கரண்டி
4. தேங்காய்த் துருவல் – 3 மேசைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுந்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
9. மோர் – 1/2 கோப்பை
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வாழைப் பூவை நறுக்கும் போது அது கருப்பாகாமல் இருக்க, மோர் கலந்த தண்ணீரில் நறுக்கியப் பூவைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து நீரை வடித்து வைக்கவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிய பின், அதில் வாழைப்பூ, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
5. சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேகவிடவும்.
6. வாழைப்பூ வெந்ததும், வேகவைத்த பருப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.