வாழைக்காய் வறுவல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் - 2 எண்ணம்
2. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
3. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
8. பூண்டு - 4 பற்கள்
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வாழைக்காயின் தோலை மெலிதாகச் சீவிவிட்டு, வட்ட வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ சிறிதாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்துத் தாளிக்கவும்.
4. ஒரு கடாயில் மசாலா கலந்த வாழைக்காயைப் போட்டு மிதமான நெருப்பில் கிளறவும்.
5. தண்ணீர் தெளிக்காமல், மூடி வைக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.