வாழைக்காய் பொரியல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வாழைக்காய் - 2 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
5. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
8. கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. வாழைக்காயை வட்டம் அல்லது சதுர வடிவில் நறுக்கி, சிறிதளவு தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக வைத்துத் தண்ணீரை வடித்துத் தனியாக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. வதங்கிய வெங்காயத்துடன் வேக வைத்த வாழைக்காயைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
5. சிறிது நேரம் சிறு நெருப்பில் வைத்த பிறகு, அடுப்பை அணைத்துவிட்டுத் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.