காலிபிளவர் வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. சோம்பு - 1/2 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
4. அதில் காலிபிளவர் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் ஊறவைத்து, பின் தண்ணீரை வடிகட்டித் தனியாக வைக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போடுத் தாளிக்கவும்.
6. அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
7. அடுத்து தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
8. கடைசியாக வேகவைத்த காலிபிளவர் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
9. மசாலா காலிபிளவர் துண்டுகளின் மேல் ஒட்டும் வரை மிதமான நெருப்பில் 10 நிமிடம் வதக்கி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.