காளான் மிளகு வறுவல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காளான் - 200 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
6. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
10. கறிவேப்பிலை - சிறிது
11. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. காளான், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைத் தனித்தனியாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததுன், அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. அத்துடன் தக்காளி சேர்த்து அது நன்றாக மசியும் வரை வதக்கவும்.
5. அதனைத் தொடர்ந்து அதில், நறுக்கியக் காளான், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
6. காளான் சுருங்கி அதிலிருந்து வரும் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்.
7. தண்ணீர் முழுமையாக வற்றியதும் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
8. காளானுடன் மசாலா ஒன்று சேர்ந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.