கத்தரிக்காய் மசாலா வறுவல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 1/4 கிலோ
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
5. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. சோம்பு - 1/2 தேக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
12. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, கறுத்துப் போகாமல் இருக்க உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
3. நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. கத்தரிக்காயைத் தண்ணீரை வடித்துவிட்டு கடாயில் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
5. அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
6. கடாயை மூடி மிதமான நெருப்பில் வேக வைக்கவும்.
7. கத்தரிக்காய் எண்ணெயிலேயே சுருள வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.