வாழைப்பூ, கோஸ் கூட்டு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ- 1 கப் (நறுக்கியது)
2. கோஸ்- 1 கப் (நறுக்கியது)
3. பாசிப்பருப்பு- 1/2 கப்
4. பச்சை மிளகாய்- 4 எண்ணம்
5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
8. மல்லித்தழை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
11. கடுகு - 1/4 தேக்கரண்டி
12. உளுந்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
13. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. பாசிப்பருப்பை சுடுநீரில் ஊற வைக்கவும்.
2. வாழைப்பூவை மஞ்சள்பொடி, மோர் கலந்த நீரில் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
3. சுத்தம் செய்த வாழைப்பூவுடன் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேக விடவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்த எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
5. இத்தாளிசத்துடன் பச்சைமிளகாய் சேர்த்து வதககவும்.
6. இத்துடன் கோஸ் சேர்த்துக் கிளறி ஊறிய பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.
7. கடைசியாக வாழைப்பூவைச் சேர்க்கவும்.
8. அனைத்தும் வெந்த பிறகு மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.