மாங்காய் பச்சடி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் - 1 எண்ணம் (பெரியது)
2. வெல்லத் தூள் - 1/2 கப்
3. சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு
8. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. மாங்காயை தோல் சீவிவிட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அத்துடன், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டுக் காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும்.
3. காய் நன்றாக வெந்தவுடன், ஒரு கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
4. வெல்லப் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. வெல்லம் நன்றாகக் கரைந்து, காயுடன் சேர்ந்த பின், கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.