சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொடிமாஸ்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
5. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
6. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. மல்லித்தழை - சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் போட்டு, அதில் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
2. வேகவைத்தக் கிழங்கை உதிர்த்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
5. அதில் உதிர்த்து வைத்தக் கிழங்கை சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.