நூடுல்ஸ் குழி பணியாரம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நூடுல்ஸ் - 250 கிராம்
2. வெங்காயம் (நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி
3. குடைமிளகாய் (நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி
4. கேரட் (நறுக்கியது) - 3 மேசைக்கரண்டி
5. தோசைமாவு - 1/2 கோப்பை
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணியில் ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
2. அதில் தேவையான அளவு உப்பு மற்றும் நூடுல்சைச் சேர்க்கவும்.
3. நூடுல்ஸ் தண்ணீரில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக வேக வைக்கவும்.
4. தண்ணீர் வற்றியவுடன் நூடுல்சை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
5. அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
6. இதில் 1/2 கோப்பை தோசை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
7. அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வைத்துக் கொள்ளவும்.
8. பனியாரக் கல்லில் ஒரு கரண்டி நூடுல்ஸ் மாவை எடுத்துக் குழியில் சேர்க்க வேண்டும்.
9. மிதமான நெருப்பில் இரு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.