கொள்ளு சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முளைகட்டிய கொள்ளு - ஒரு கப்
2. காய்ந்த மிளகாய் - 2 எண்ணம்
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிதளவு
9. தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முளைகட்டிய கொள்ளுவைக் குக்கரில் வேகவிடவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
3. அதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
4. தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.