பூம்பருப்பு சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - ஒரு கப்
2. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. இஞ்சித் துருவல் - 1/2 தேக்கரண்டி
5. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
7. மல்லித்தழை - சிறிதளவு
8. தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
9. கடுகு - 1/4 தேக்கரண்டி
10. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
11. சீரகம் - 1/4 தேக்கரண்டி
12. எண்ணெய் - தேவையான் அளவு
13. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும் ( ஒரு மணி நேரம் ஊற வைத்து செய்வதானால், பாத்திரத்தில் வேக வைக்கவும். பருப்பை குழையாமல் மலர வேக வைக்கவும்).
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் போட்டுத் தாளிக்கவும்.
3. தாளிசத்துடன் வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
4. தேங்காய் துருவல், நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.