பச்சைப்பயறு சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. முளைகட்டிய பச்சைப்பயறு - 1 கப்
2. கடுகு - 1/4 தேக்கரண்டி
3. உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
4. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
5. இஞ்சித் துருவல் - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. கறிவேப்பிலை - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முளைகட்டிய பச்சைப்பயறைக் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்துக் மிளகாய் வற்றல், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்க்கவும்.
3. அதில் வேகவைத்த பயறு, உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.