பட்டாணி மசாலா சுண்டல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காய்ந்த பட்டாணி - 1 கப்
2. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
3. புதினா - சிறிது
4. மல்லித்தழை - சிறிது
5. சீரகம் - 1/4 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
8. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
9. பட்டை - சிறிய துண்டு,
10. ஏலக்காய் - 1 எண்ணம்
11. கிராம்பு - 1 எண்ணம்
12. சோம்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
1. காய்ந்த பட்டாணியைக் குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவிடவும்.
2. பிறகு, குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
3. பொடிக்க வேண்டியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம் சேர்த்துத் தாளித்து, புதினா, மல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வெந்த பட்டாணி, உப்பு, வறுத்தப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கிளறவும். கொஞ்சம் நீர் தெளித்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் தூவிக் கிளறிக் கொள்ளலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.