முட்டைகோஸ் வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. கடலைப்பருப்பு - 1/2 கோப்பை
2. துவரம் பருப்பு - 1/4 கோப்பை
3. மிளகாய் - 4 எண்ணம்
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. சீரகம் - 1தேக்கரண்டி
6. இஞ்சி - 1 அங்குலம்
7. உப்பு -1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் - சிறியது
9. முட்டைக்கோஸ் (பொடியாக நறுக்கியது) -1 கோப்பை
10. வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/4 கோப்பை
11. கறிவேப்பிலை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு – 200 மில்லி
செய்முறை:
1. கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. மிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சியை அரைத்து, உடன் ஊற வைத்த பருப்பை நீர் வடித்து, அதனுடன் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும.
3. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கையினால் நன்கு ஒன்று சேரப் பிசைந்து வைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் காய வைத்து, வடைக் கலவையை எலுமிச்சம்பழம் அளவு உருண்டைகளாக்கி லேசாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.