வாழைப்பூ வடை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ – 1 கோப்பை
2. கடலைப் பருப்பு – 1 கோப்பை
3. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
5. சோம்பு – 1 தேக்கரண்டி
6. இஞ்சி – சிறிய துண்டு
7. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
8. எண்ணெய் – தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கடலைப் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நீரை வடிக்கவும்.
2. வாழைப்பூவைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. ஊறவைத்த பருப்பு, சோம்பு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக (தண்ணீர் ஊற்றாமல்) அரைக்கவும்.
5. அரைத்த மாவுடன் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாகப் பிசையவும்.
6. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பிசைந்த மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொன்னிறமாக வரும் வரை மிதமான நெருப்பில் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.