காலிப்பிளவர் சூப்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. காலிஃப்ளவர் துருவல் - 1 கப்
2. காலிஃப்ளவர் தண்டு (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
3. பால் - 1 கப்
4. மிளகுத்தூள் - சிறிது
5. கோதுமை மாவு - 1 மேசைக்கரண்டி
6. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
7. பூண்டு - 5 பல்
8. நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரைப் போட்டு வதக்கவும்.
4. அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவைப் போட்டுக் கிளறவும்.
6. இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
7. கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.