பீட்ரூட் சூப்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பீட்ரூட் - 1 எண்ணம்
2. பிரியாணி இலை - 1 எண்ணம்
3. சின்ன வெங்காயம் - 6 எண்ணம்
4. சிறிய தக்காளி - 1 எண்ணம்
5. பூண்டு - 3 பல்
6. வெண்ணெய் - 3 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. மிளகுத்தூள் - தேவையான அளவு
செய்முறை:
1. பீட்ரூட்டைத் தோல் நீக்கி, கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, அதனுடன் பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம், பூண்டு வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. அதன் பின்பு நறுக்கி வைத்த பீட்ரூட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும்.
5. அதனுடன் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.
6. பீட்ரூட் நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு பீட்ரூட் வேகவைத்தத் தண்ணீரை வடிகட்டவும்.
7. வெந்த பீட்ரூட் கலவையை,ஆற வைத்து, ஆறியதும் அதனை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும்.
8. வாணலியில் அரைத்த விழுது மற்றும் வேகவைத்த தண்ணீர் சேர்த்து,மீண்டும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
9. தேவையெனில் கூடுதலாக, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.