காலிபிளவர் சூப்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. காலிபிளவர் - 1 எண்ணம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. பூண்டு - 4 பற்கள்
4. பால் - 1 கோப்பை
5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. காலிபிளவர் பூவையும், தண்டையும் பிரித்து, இரண்டையும் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
2. மிக்ஸியில் காலிபிளவர் தண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அரைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு காலிபிளவர் பூவை வதக்கவும்.
4. பூ வதங்கியவுடன் அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டுத் தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் அரைத்த தண்டுக் கலவையை சேர்க்கவும்.
6. பின் அதில் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்த வேண்டும். அதில் பால் மற்றும் காலிபிளவர் பூவைச் சேர்த்து இறக்கிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.