சிக்கன் சூப்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கோழிக்கறி (எலும்பு சேர்ந்தது) – 500 கிராம்
2. வெங்காயம் – 10 எண்ணம்
3. சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. தக்காளி – 1 எண்ணம்
7. இஞ்சி – 1 துண்டு
8. பூண்டு – 5 பல்
9. பட்டை, லவங்கம் – தலா 1
10. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
11. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
12. மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
13. உப்பு - தேவையான அளவு
14. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிப் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும்.
4. பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
5. வதக்கிய கலவையை கனமான பாத்திரத்தில் சேர்த்து, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி நன்கு வேக விட்டு இறக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.