கடலை மாவு லட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கடலை மாவு - 1 கப்
2. சர்ர்க்கரை (பொடி செய்தது) - 3/4 கப்
3. நெய் - 6 தேக்கரண்டி
4. ஏலக்காய்த்தூள் - சிறிது
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. அதை அடுப்பில் அதிக சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
3. பினனர், அடுப்பைப் பாதி சூட்டில் நான்கு நிமிடங்கள் கிளறிக் கொண்டிருக்கவும்.
4. அந்தக் கலவையை நன்கு ஆற வைக்கவும்.
5. அதில் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
6. பின்னர் அதை லட்டுவாக உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: லட்டு உருண்டையாக வரவில்லையெனில், சிறிது வெதுவெதுப்பான நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.