உலா்பேரீட்சை அத்திப்பழ லட்டு
சகானாதேவி இளஞ்செழியன்
தேவையான பொருட்கள்:
1. பேரீட்சை பழம் - 100 கிராம்
2. செர்ரி பழம் - 50 கிராம்
3. உலா் திராட்சை (கருப்பு) - 50 கிராம்
4. உலா் அத்திப்பழம் - 50 கிராம்
5. டூட்டி புரூட் - 50 கிராம்
6. முந்திரிப் பருப்பு - 50 கிராம்
7. தேன் - 100 மில்லி
8. ஏலக்காய் பொடி - தேவையான அளவு
செய்முறை:
1. உலா் பழங்களைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
2. நறுக்கிய பழங்களில் தேனை ஊற்றி நன்றாகப் பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
3. பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டி தேவையான ஏலக்காய் தூளை தூவிவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.