உருளைக்கிழங்கு முறுக்கு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உருளைக் கிழங்கு - 2 எண்ணம்
2. அரிசி மாவு - 2 கிண்ணம்
3. கடலை மாவு - 1 கிண்ணம்
4. மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக் கிழங்கை வேகவைத்து, அத்துடன் 2 கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2. பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
3. அந்தக் கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
4. இப்போது அரைத்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, முறுக்கு மாவு பதத்திற்குப் பிசையவும்.
5. ஒரு வாணலியி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மாவை முறுக்கு வடிவில் பிழிந்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.