மாம்பழ அல்வா
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 3 எண்ணம்
2. ரவை - 4 கரண்டி
3. சர்க்கரை - 1 கோப்பை
4. நெய் - 1/2 கோப்பை
5. ஏலத்தூள் - 1 கரண்டி
6. மஞ்சள் புட் கலர் - சிறிது
7. முந்திரிப் பருப்பு - 50 கிராம்
8. உலர் திராட்சை - 50 கிராம்
செய்முறை:
1. மாம்பழத்தைத் தோல் சீவி, துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
2. வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், அதில் ரவையைச் சேர்த்து வறுக்கவும்.
3. ரவை வறுபட்டதும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
4. ரவை வெந்ததும் அரைத்த மாம்பழ விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
5. ரவை கெட்டியானதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
6. பின் சூடான நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கிளறவும்.
7. கடைசியாக, அதில் ஏலத்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.