கேழ்வரகு லட்டு
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 200 கிராம்
2. வெல்லம் (துருவியது) - 200 கிராம்
3. நெய் - 100 மி.லி
4. உப்பு - 1 சிட்டிகை
5. ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
6. சுக்குத் தூள் - 1 சிட்டிகை
7. முந்திரி - சிறிது
8. உலர் திராட்சை - சிறிது.
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் அதில் திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் போட்டு வறுத்துத் தனியாக வைக்கவும்.
2. வாணலியில் கேழ்வரகு மாவைப் போட்டுச் சிறிது நேரம் வறுக்கவும்.
3. மிதமான சூட்டில் துருவிய வெல்லம், நெய் சேர்த்துப் பிசையவும்.
4. அத்துடன் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைக்கவும்.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.