அவல் – பேரீச்சை உருண்டை
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அவல் – 1/2 கப்
2. பொட்டுக்கடலை – 1/2 கப்
3. பேரீச்சம்பழம் – 100 கிராம்
4. ஏலக்காய் – 2 எண்ணம்
5. நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும், அதில் அவலைப் போட்டு நன்கு பொரியும் வரை வறுக்கவும்.
2. வறுத்த அவலை ஆற வைக்கவும்.
3. அவல், பொரிகடலை, கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் இலேசாக அரைத்தெடுக்கவும்.
4. அரைத்த மாவை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.