மாம்பழ அல்வா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மாம்பழம் - 1(கனிந்தது)
2. ரவை - 150 கிராம்
3. சர்க்கரை - 150 கிராம்
4. நெய் - தேவையான அளவு
5. முந்திரிப் பருப்பு - சிறிது
6. ஏலக்காய்த்தூள் - சிறிது
செய்முறை:
1.மாம்பழத்தைத் தோல் நீக்கி சிறுதுண்டுகளாக வெட்டி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த விழுது குறைந்தது 300 கிராம் இருக்க வேண்டும்.
2. வாணலியில் ரவையை இலேசாக வறுத்து அதைப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
3. வாணலியில் மாம்பழ விழுதைப் போட்டு சிறு தீயில் இலேசாக வதக்கவும்.
4. அதில் ரவை, சர்க்கரை போட்டு நன்றாகக் கிளறவும். அத்துடன் நெய் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.
5. முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவி நெய் தடவிய தட்டில் ஊற்றிச் சமமாகப் பரப்பி விடவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.