இஞ்சிக் காபி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி - 2 துண்டுகள்
2. சர்க்கரை - தேவையான அளவு
3. காப்பித்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. இஞ்சியைச் சிறு உரலில் இடித்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இடித்த இஞ்சியைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
3. கொதிக்க ஆரம்பித்ததும், காப்பித்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
4. பருகும் பொழுது தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
குறிப்பு: இஞ்சி விரும்பாதவர்கள், இஞ்சியை வடிகட்டிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.