இஞ்சி - துளசி டீ
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. டீத்தூள் - 4 தேக்கரண்டி
2. எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
3. தேன் - 6 தேக்கரண்டி
4. இஞ்சிச்சாறு - சிறிதளவு
5. துளசி இலைகள் - 5 எண்ணம்
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் 4 அல்லது 5 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும்.
2. அதனை 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.
3. பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.