........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-2 பகுதி-8
உண்மை -வேந்தன் சரவணன். 8. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுவாரா?
"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்"
இந்தப் பொருள் தவறானது என்று எல்லோருக்கும்
தெரியும். இருந்தாலும் இதை நாம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
சிக்கலான நேரத்தில் அடிப்பது தான் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொல்வது சரியான
கருத்து ஆகாது. ஏனென்றால் சிக்கலான நேரத்தில் அண்ணன் தம்பி போன்ற உறவுகள்
தான் கைகொடுப்பார்களே தவிர "அடியும் உதையும்" கைகொடுக்காது. பல நேரங்களில்
இந்த அடியும் உதையும் சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். இதை நாம் நடைமுறை
வாழ்க்கையில் நன்கு அறிவோம். எனவே இந்தக் கருத்து தவறாகும் என்பது
தெளிவாகிறது.
ஆனால் அண்ணன்-தம்பியருக்குள் விரிசல் ஏற்பட்டால்
விரிசலை சரி செய்யலாம்; பழகாமல் இருக்கலாம்; ஆனால் உறவினை ஒரேயடியாக
அறுத்துக் கொண்டுவிட முடியாது. என்ன தான் செருப்பு தன்னை அணிபவருக்காகத்
தேய்ந்து சருகாய்ப் போனாலும் ஒரு கட்டத்தில் அதைத் தூக்கி எறிந்துவிட்டு
புதிய செருப்பைப் பயன்படுத்தித் தான் ஆகவேண்டும். செருப்பு மாதிரி
தனக்காக அண்ணன்-தம்பியர் தேய்ந்து சருகாய் ஆகாவிட்டாலும் அவர்களைத் தூக்கி
எறிய முடியாது. அன்றியும் பல்வேறு உறவின் முறைகளுள் அண்ணன்-தம்பி உறவு
மிக முக்கியமானது. உதவி என்று தேவைப்பட்டால் அண்ணன்-தம்பியர் தான் முன்
வருவார்களே ஒழிய அக்காள்-தங்கையோ மாமன்-மச்சானோ வருவதில்லை. உதவி செய்யும்
உறவுகளுள் அண்ணன்-தம்பி உறவே முதன்மையானது என்பதால் தான் செருப்பையும்
அண்ணன்-தம்பி உறவினையும் ஒப்பிடுகிறது இப்பழமொழி. ஒற்றுமையே இல்லாத இரண்டு
பொருட்களை ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் ஒன்றின் மதிப்பை உயர்த்திக் கூறலாம்
என்பதற்கு இப்பழமொழி ஒரு எடுத்துக்காட்டாகும். ********* (மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)
|
முகப்பு |