........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
தொடர் கட்டுரை-2 பகுதி-9
உண்மை -வேந்தன் சரவணன். 9. கற்க கசடற குறளில் பிழை...!
"கற்க கசடற கற்பவை கற்றபின்
வள்ளுவர் கூறும் "நிற்க" என்ற சொல்லுக்கு
"நடந்துகொள் அல்லது வாழ்" என்று பொருள் கூறி இருப்பது முரணான கருத்தாகும்.
ஏனென்றால் இந்த இரண்டு வினைகளும் (நடந்துகொள்ளுதல், வாழ்தல்) நிற்றல்
வினையில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பது நாமறிந்த உண்மை. கற்றவாறு
வாழவேண்டும் என்று கூறுவதே வள்ளுவரின் நோக்கம் என்றால் "நிற்க" என்ற
சொல்லுக்குப் பதிலாக "இயலுக" அல்லது "செய்க" என்ற சொல்லை வள்ளுவர்
பயன்படுத்தி இருப்பார். இவற்றைப் பயன்படுத்தாததில் இருந்து வள்ளுவர் கூற
வரும் கருத்து இது அல்ல என்பது தெளிவாகிறது. அன்றியும் இந்த அதிகாரத்தில்
கல்வியின் சிறப்பைத் தான் வள்ளுவர் கூற வருகிறாரே அன்றி "இப்படி நட,
அப்படி நட" என்று அறிவுரை கூற விரும்பவில்லை. இந்த அதிகாரத்தில் உள்ள
ஏனைய பாடல்களில் இருந்து இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
இக்குறளின் இரண்டாம் அடியில் உள்ள மூன்றாவது
சீரில் ஒரு எழுத்துப் பிழையால் தான் இக்குறளுக்குத் தவறான பொருளைக் கூறி
உள்ளனர் என்று தெரிய வந்தது. "தக" என்று இருக்க வேண்டிய இடத்தில் "தாக"
என்று இருக்க வேண்டியதே திருத்தம் ஆகும். இனி இரண்டாம் அடியினை
கீழ்க்காணுமாறு திருத்தி எழுதி சீர் பிரிக்கலாம்.
"அதன் நினைவாய் (ஞாபகமாய்) இருக்க" என்பதே
இந்த அடியின் பொருள் ஆகும். நிற்றல் என்பது ஓரிடத்து இருத்தல் என்னும்
பொருள்படுவதால் இருக்க என்னும் பொருளை உணர்த்த நிற்க என்ற சொல்லைப்
பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இது சரியே ஆகும். இனி வள்ளுவர் கூறவரும்
சரியான கருத்து என்ன என்று பார்ப்போம். "கற்க வேண்டியவற்றை பிழையின்றிக்
கற்கவேண்டும்; அவ்வாறு கற்ற பின்னர் அதன் நினைவாய் இருக்கவேண்டும் (மறந்துவிடக்
கூடாது)." ********* (மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)
|
முகப்பு |