........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:103

கூவத்தமிழன் கூவுகிறேன்

அழுக்குகளின் வாசம்
அவலங்களின் குரல்
கொசுக்களின் இசை முரசும்
கொடுக்காமல் குருதி உறிஞ்சும்
படித்து உரை இல் பிறக்கும் குழந்தை
பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை
சிங்காரச் சென்னை எல்லாம் வெறும் போதை -நாங்கள்
சிரமாட்டி கேட்டுக் கொள்ளும் பேதை
சுத்த குடிநீர் இல்லாமல் தவிக்கும் -இந்த
கோலத்தை எந்த நாய் பார்க்கும்
கண் குருடாக இருந்தாலும் தெரியும் -நாற்றம்
கண நேரத்தில் நாசியை பிளக்கும்
தொழிற்சாலை சாரம் இங்கு வடியும்
தூக்கம் இன்றி வாழ எப்படி முடியும்
எட்டிப் பார்த்தால் எல்லாம் மாளிகை
எட்டடி குடிசையில் ஏழைகளின் வாழ்க்கை
சாக்கடை சகதி
அதுதான் எங்கள் வசதி
இந்த வாழ்க்கையே பழகிப்போச்சு
இந்த வாசமே வாழ்க்கையாச்சு.

-அத்திவெட்டி ஜோதிபாரதி.

 
m
 

அத்திவெட்டி ஜோதிபாரதி அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.