........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:104

சித்திரைப் பெண்ணே கோபமா?

மெல்ல மெல்ல அடியெடுத்து
மெல்லியலாள் சித்திரையும்
மயக்குமொரு புன்னகையுடன்
மீண்டுமிங்கே வந்திட்டாள்

செல்லமாய்ச் சிறு கோபம்
சித்திரை பெண்ணவளுக்கு
தாங்கி வரும் புத்தாண்டு
தடைப்பட்டு போனதாலோ

கோபம் உனக்கேனம்மா உன்
கோலம் நமக்கு அழகம்மா
சித்திரை நீ புகுந்ததும் ஏனோ
சித்தமெலாம் நிறையுதம்மா

தமிழர் தம் புத்தாண்டை
தையவள் கவர்ந்திட்டாள்
தவறொன்றும் இல்லையம்மா
தைமகளும் தமிழ்மகள் தானம்மா

வருடங்கள் பல நூறு
வைத்திருந்தாய் புத்தாண்டை
விட்டுக் கொடுப்பதிலும் உனக்கு
வெற்றி என்றே எடுத்துக் கொள்

சரித்திரப் புத்தகத்தில் உனக்கு
சரித்திரம் இருக்குதம்மா
பிறக்கும் இந்தப் புத்தாண்டு இனி
பிறந்து கொஞ்சம் தவழும் போது

சித்திரை உன் மடி தேடும்
சிதறாமல் அள்ளியெடுத்து
சீராட்டி நீ வளர்த்து அளித்திடுவாய்
வைகாசி மாதத்தில்

தமிழர் புத்தாண்டின் தாய் நீயில்லை
தவறில்லை பொறுத்துக் கொள்
தாய்மை நிறைந்தவள் உனக்கேன் கோபம்
தரணியில் என்றும் உனக்கோர் தனியிடம்

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.