........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:109

ஆசையில்லாத ஆசை

விண்ணுலகம் போய்வர ஆசையில்லை
விருதுகள் வாங்கிட ஆசையில்லை
பட்டங்கள் பெற்றிட ஆசையில்லை
பட்டினியில் வீழ்ந்திட ஆசையில்லை

பொன்நகை பூட்டிட ஆசையில்லை
புன்னகை மறந்திட ஆசையில்லை
பூக்களைப் பறித்திட ஆசையில்லை
புழுதியில் வீசிட ஆசையில்லை

கனவுகள் கண்டிட ஆசையில்லை
காலையில் கலைத்திட ஆசையில்லை
ஆசை கொண்டிட ஆசையில்லை
அழிவில் வீழ்ந்திட ஆசையில்லை

கலவரம் புரிந்திட ஆசையில்லை
குருதிகள் சிந்திட ஆசையில்லை
மதங்களைப் போற்றிட ஆசையில்லை
மனங்களை மறந்திட ஆசையில்லை

புகை பிடித்திட ஆசையில்லை
புற்றில் வீழ்ந்திட ஆசையில்லை
மது அருந்திட ஆசையில்லை
மனதைக் கெடுத்திட ஆசையில்லை

முதுமையில் வாழ்ந்திட ஆசையில்லை
இளமையில் இறதிட ஆசையில்லை
மனிதனாய்ப் பிறந்திட ஆசையில்லை
மரணத்தை எதிர்த்திட ஆசையில்லை

ஆசையில்லை ஆசையில்லை
என்றுரைத்த என்
ஆசைகள் நிறைவேற்றிட
ஆசையில்லையோ?
என்னருமை நண்பர்களே...

-சிவ. ஸ்ரீ. ரமேஷ், திண்டுக்கல்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.