........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:112

வெற்றியின் ரகசியம்!

எதிர்மறை எண்ணங்களை-உன்
மனதிலிருந்து நீக்கிவிடு...
கவலை-பயம்-வெறுப்பு
மூட நம்பிக்கைகளை
முற்றிலும் அகற்றி விடு...
தோல்வி மனப்பான்மையினை
அடியோடு மறந்து விடு...

வெற்றி அடைவேன்
என்பதை மட்டும்
நினைத்துக் கொண்டேயிரு...
நினைத்ததை செய்து கொண்டேயிரு
அதிர்ஷ்டம் வருமென எதிர்பார்த்தால்
ஏமாற்றம் தான் மிஞ்சும்
உன் எண்ணங்கள் யாவும்
ஆக்கப்பூர்வமானதாய் இருக்கட்டும்

பெரிய மரம் முளைக்க
சிறிய விதையே காரணம்
உன் நல்ல எண்ணங்களே
உன் வெற்றியின் ரகசியம்...

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.