........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:113

ஒப்பனை உறவுகள்

 

 

 

நான் மட்டுமல்ல
நம்மில் பலரும்
நம்மோடு சிலரும்
ஒப்பனையாகவே
உலாவிக்கொண்டிருக்கிறோம்

இதயத்தில் பெருவலி
இருமுறையான போதும்
இருக்கின்ற ஒருமகளை
இணைகரம் சேர்த்திடவே
ஒப்பனையாய் உதடுகளில்
ஒன்றுமில்லை நலம்தான்...

நாளுக்கு நாள்மாறும்
நாகரீகச் சாக்கடையில்
இதயத்தைக் கிழிக்கும்
இன்பத்தை மறைத்து (எம்மனதில்)
கொண்டவளை தோழியென
உறவுக்குச்சொல்லிவிட்டு
உறவான உறவுகள்
எத்தனை...எத்தனை..?
நான் மட்டுமல்ல
நம்மில் பலரும்
நம்மோடு சிலரும்...

ஒத்தையான ஒருமகளின்
ஒத்தைக் கல்காதணியும்
அடமானம் ஆகிடாது
அடிவயிற்றுப் பெருவலியை
அடைகாத்(த)து கோழி போல
ஒப்பனையாய் உதடுகளில்
ஒன்றுமில்லை நலம்தான்...

இப்படியாக சில பேர்...
இன்னும் பல பேர்...

-கண்டனூர் சசிகுமார்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.