........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:116

இயற்கை என்னும்...

இயற்கையெனும் மங்கையவள்
இதயமென்னும் தோட்டத்திலே
இனிமையென்னும் தென்றலினால்
இசைகூட்டிப் பாடுகின்றாள்

பச்சைப் புல் போர்வையால்
பாவை தன் மேனி மூடி
பதிந்துவிடும் கால்தடத்தை
பாங்காகத் தாங்கிடுவாள்

நீலக்கடல் ஓவியமாய்
நுரை கொண்டு கரை தழுவி
நிலமங்கை சுகம் காணும்
நிகழ்வதுவும் இயற்கையன்றோ

ஆழியதை நுகர்ந்தெடுத்து
அலைந்தாடும் கருமேகம்
காதலினால் உருகிக்
கடுமழையாய்ப் பொழிந்திடுமோ

கேட்பவை கிடைக்காமல்
காற்றாகச் சீற்றம் கொண்டு
கண்மூடிச் சீரழிப்பதுவே
காணுகின்ற கடும்புயலோ?

வெள்ளையாடை கொண்டு
விரித்து விட்ட கம்பளமாய்
சிரித்திருக்கும் தோற்றம் தானோ?

சிலநேரப் பனிமழையும்
இயற்கை படைத்த மனிதனா?
இல்லை மனிதன் படைத்த இயற்கையா?
தூய்மைதனை இழக்காத ஒன்று
துல்லியமாய் இயற்கைதான்.

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.