........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:126

குங்குமப்பூ...

ஏழெட்டு திங்களுக்கு
பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்,
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை
உன்வரவு உறுதியானதிலிருந்து
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட...

உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் லயிக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.
பத்தாம் மாதம்
என் வானமாகாமல்
பத்துவார
வானவில் ஆனதேன்?

வந்து கொண்டே இருக்கும்
உன் வரவுக்கான
வாழ்த்துகளை என்ன செய்ய?
இப்பொழுதும்
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை.
என் வலியை விட...

கொட்டிக்கிடக்கிறது
குங்குமப்பூ... ...?
சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர்முன்...

-சி.கருணாகரசு.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.