........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:127

குறுங்கவிதைகள்

ஆண்டுதோறும் அதே குழியில்
மரம் நடும் விழா...
ராசியான இடம்

_________________

மரங்களை வெட்டினார்கள்
மரம் நடுவிழாவுக்கு வரும்
மந்திரிக்குப் பாதையமைக்க.

_________________

கொல்லாமை இயக்க
மாநாட்டுமேடையில் பாம்பு
கொல்லப்பட்டது கொள்கை.

_________________

ஆலயத் திருப்பணி வசூல்
அழகுற முடிக்கப்பட்டது.....
அறங்காவலரின் புது இல்லம்.

-கிரிஜா ம‌ணாளன், திருச்சிராப்ப‌ள்ளி.

 
m
 

கிரிஜா ம‌ணாளன் அவர்களின் மற்ற படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.