........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:134

சாவே சாவகாசமாய் வா!

சாவே! நீ என்னிடம் சற்று
சாவகாசமாய் வா! நான்
சாதிக்க வேண்டும்...
சரித்திரம் படைக்க வேண்டும்!

பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கப்
பெரிதாக நானொன்றும் செய்யவில்லை!
பேசும் மொழிக்குப் பெருமை சேர்க்கப்
பெரிதாக நானொன்றும் செய்யவில்லை!
சாவே! நீ என்னிடம் சற்று
சாவகாசமாய் வா!

என்னோடு பிறந்தவன்
என்னோடு வாழ்ந்தவன்
இன்னுமிங்கே...
மூளைக்கு விலங்கிட்டு
மூடனாய் புதைகுழியில்
மூடும் முன் அவனை
அறிவோடு வலம் விட்டுப்
பகுத்தறிவாளனாய்ப்
பார்க்க வேண்டாமா?
சாவே! நீ என்னிடம் சற்று
சாவகாசமாய் வா!

சாதிக்கும் சிங்கங்கள்-இங்கு
சாதிக்குச் சங்கம் வைத்துப்
பாதிக்கும் செயல்களால்
பாழ்பட்டுப் போவதைப்
பார்த்தும் பாராமல்
இனிப் போவதேது?
சாவே! நீ என்னிடம் சற்று
சாவகாசமாய் வா! - நான்
சாதிக்க வேண்டும்...!
சரித்திரம் படைக்க வேண்டும்...!!       

-பொ.நடராஜன்
கூடுதல் தலைமைக் குற்றவியல் நீதிபதி (ஓய்வு)
மதுரை.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.