........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:142

வேதனை தரும் வெடிப்புகள்!

அரசியல் ஆதாயம் கருதி
பின்விளைவுகள்
பற்றிய சிந்தனை ஏதுமின்றி
பாராளுமன்றத்தையே
நிர்மூலமாக்க நினைத்த
பயங்கரவாதிகளுக்கும்
கருணை காட்ட எண்ணுவது –
அதன் பாதுகாப்பில்
உயிர்நீத்தவர்களைத்
துச்சமாக மதிக்கும்
துர்நிலைக்குச் சமமாகும்.

வாக்குகளைச் சேர்ப்பதற்கு
வாடிக்கையாகிட்ட இவ்வழிகளை
சம்பந்தப்பட்டவர் கூடச்
சம்மதித்திட மாட்டார்கள்.

மோசத்தைச் சுமக்கும் சுயலாபத்திற்காய்
தேசத்தை அடகு வைக்க
முடிவெடுப்பது தொடரும் வரை
வெடிகுண்டுகள் நாளும் உயிர்பெறும்.
வேதனைகள் தினம் முளைவிடும்.

-சித.அருணாசலம், சிங்கப்பூர்.

 
m
 

சித.அருணாசலம் அவர்களது இதர படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.