........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:145

அஞ்சலி செலுத்துவோம்!

மண்ணுயிரை வாழவைக்க
தண்ணுயிரை ஈந்து
பாரதம் காத்த
பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு
நாம் செலுத்துவோம்
நம் அஞ்சலியை...!

சிறையிலும் தான் பட்ட
துயரிலும்
நாட்டின் நன்மைக்குப்
பாடுபட்ட
இம்மண்ணின் மைந்தர்களுக்கு
நாம் செலுத்துவோம்
நம் நினைவஞ்சலியை...!

ஊனின்றி உறக்கமின்றி
உற்றார் பெற்றார் உறவுகள்
நினைவின்றி
உதிரம் சிந்தி
தேகம் இழைக்க
உழைத்து மடிந்த
சான்றோர்களுக்கு
நாம் செலுத்துவோம்
நம் இதய அஞ்சலியை...!

தன் சுகத்தை விட்டுக்
கொடுத்து
மண் சுகத்தை
வாழவைக்கத்
தங்களையே இழந்து
தாய்மண்ணைக்
காத்த தியாகிகளுக்கு
நாம் செலுத்துவோம்
நம் அன்பஞ்சலியை...!

வந்தே மாதரம்
காதில் ஒலிக்க
நரம்புகள் புடைக்க
மடிந்தும்
நம் மனதில்
நிலைத்து நிற்கும்
நம் தேசமைந்தர்களுக்கு
நாம் செலுத்துவோம்
நம் புஷ்பாஞ்சலியை...!

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m
 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.