........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:147

ஒவ்வொன்றும் அனுபவம்...!

ஒவ்வொன்றாய்ப் படிக்கின்றேன்
ஒவ்வொன்றும் அனுபவம் !

அத்தனை வரிகளும் மனதில்
ஆழமாய் பதித்து விட்ட
தடங்கள் ........
வலியா? இல்லை வரமா?

தன் இதழ்களுக்கு மத்தியில்
தேனைப் பதுக்கும் மலர்கள்
தைப்பதற்கு முட்களையும்
தன்னுள்ளே வைத்திருக்கும்
தனியான சூட்சுமம்
அறியாமல் தானோ?

அழுகின்றது எனதுள்ளம்
ஆழ்கடலின் நீலத்தை
ஆழ்ந்து பருக நானும்
ஆசையுடன் ஓடிப் போகையில்
அடியினுள்ளெ கல்லொன்று
அழுத்தியதே காலை...
அப்போதும் கூட அது சொன்ன
அருமையான தத்துவம்
அறியாத இம்மடையன்... இப்போது
அழுதென்ன லாபம் ?

சுகமாக இசை மீட்டும் வீணை
சுந்தரகானத்தில் மயங்கிடும் வேளை
யாரறிவார் ? அவ்விசை கொடுக்க
வீணையின் தந்திகள் படும் வேதனை?

ஒவ்வொன்றாய்ப் படிக்கின்றேன்
ஒவ்வொன்றும் புதிய அனுபவம்

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.