........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:152

கோபம்!

கோபம்...
மனிதனுக்குள் ஏற்படும் சுபாவம்
இயற்கைக்கு ஏற்பட்டால்...

வானத்திற்கு நிலவின் மீது கோபம்...
நிலவு உதிக்காமல் இருக்குமா?

கடலுக்குக் கரையின் மேல் கோபம்...
கடல்தான் கரையேறிடுமா?

பூவுக்குச் செடியின் மீது கோபம்...
பூ தான் பூக்காமல் இருந்திடுமா?

நீயும்...
வாழ்க்கையின் மீது கோபப்பட்டால்
வாழாமல் இருந்துவிட முடியுமா?

முடியாத விசயங்களுக்கு
முற்றுப்புள்ளி வைப்பது தவறு...

வாழ்க்கை விளையாட்டில்
வசந்தமெனும் சொந்தமே கோபம்
வாழ்வில் கோபமும் அழகே
நினைத்திருந்து
மறந்திருந்தால் மட்டுமே...!

- வடகரை. எம். ஷேக் அலாவுதீன்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.