........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:153

தெரியுமாடி அந்த சேதி...?

சிறு தாவணி வயசுல
சிட்டாட்டம் நீ பறந்த
சிறு கிராமம் நான் பாக்கப்
போன கதை சொல்லட்டுமா?

தெக்கால நாம நட்ட
தென்னையில சீவனில்லை,
பட்டு போன மரத்துக்குக் கீழ
படுத்து ஒண்ணும் லாபமில்லை.

"பூமத்திய ரேக எங்க?"
வாத்தியச்சி கேள்வி வெக்க
ஒங்கோலந்தான்னு சொல்லி
ஒளிஞ்ச காலமெங்க?

ஆலம் எலை மடிச்சி ஊதி
பேசி புட்ட நெனப்போட
உரக்க கத்தும் ஊமையன் போல்,
உன் தெரு குழாயடியில்
கொஞ்ச நேரங் கண்ண மூடி
சொக வாழ்க்கை வாழ்ந்துகிட்டேன்.

அறிஞ்ச மூஞ்சி ஆருமில்லை,
நெழல் ஒதுங்க நாதியில்லை.
பழி சொல்ல சாமியுண்டு
பழய கோயில் போயி நின்னேன்.

நெத்தியில பொட்டு வெச்சு
மீந்த சாந்த கொட்டி வெச்சு
பரிட்சை நம்பர் கிறுக்கி வெச்ச
தூணில் சத்த சாஞ்சிகிட்டேன்.

இட்டிலிய பிச்சி வீச
சண்டையிட்டு திண்ணு போன
கொளத்து மீனுவ
சொகம் கேட்டுகிட்டேன்.

உச்சி வெயில் சுட்டுதுன்னு
துள்ளி துள்ளி நீ ஓட
சூடுபட்ட பிரகாரத்தை
சுத்திச்சுத்தி நீரூத்த
இப்போ நான் வந்த கத
சொல்லியழ நீ வேணும்.

வந்து சேந்த சேதி சொல்ல
நீ மாத்தி நானும்,
நான் மாத்தி நீயும்,
அடிச்ச மணி தேடி பாத்தேன்.

தெரியுமாடி அந்த சேதி?

நீ மாத்தி நானும்
நான் மாத்தி நீயும்
காதல் சொன்ன கோயில் மணிக்கு
நாக்கறுந்து போன கதை?

- ஸ்ரீ.

 
m
 

ஸ்ரீ அவர்களின் மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.