........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:154

காத்திருந்து காத்திருந்து...!

கண்ணிரண்டில் மையெழுதி - எனைக்
கணப்பொழுதில் உன் வசமாக்கி
காணமல் போனவளே! ஏனென்னைக்
கானகத்தே தவிக்க விட்டாய்?

கார்முகிலாய் கூந்தல் விரித்து - உன்
கருவிழியால் கதை பேசி
காதல் எனும் கடலினிலே
கவிழ்த்து விட்ட காரிகையே!

வானத்திலே வலம் வரும் அந்த - வட்ட
வண்ண நிலவாக பூவதனம் அமைந்தவளே
வந்திடலாம் அமாவாசை... நிலவதற்கு
வாராது! வாராது! உன் நினைவின் முடிவெனக்கு

வஞ்சியென்று உன்னை நானும் விளித்ததினால்- நீயும்
வஞ்சித்துப் பார்ப்பதென்று முடிவெடுத்தாயோ சொல்?
விஞ்சி நிற்கும் நினைவுகள் எந்தன் நெஞ்சில்
விடையறியா வினாவாக்கி நீயெங்கே சென்றாயோ?

காலமகள் கணக்கினிலே பொன்மானே! - உனைக்
காணாத பொழுதெல்லாம் சூனியமாய்ப் போகுதடி
காதலது நோய் தானோ? காலனவன் ஆயுதமோ?
காத்திருந்து காத்திருந்து காற்றோடு போவேனோ?

-சக்தி சக்திதாசன், லண்டன்.

 
m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.