........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:158

அகிலத்தின் புகழனைத்தும்...

அனைத்துப் புகழுக்கும்
நன்றிக்கும் உரியவனே
யா அல்லாஹ்!
எச்சில் வாயாலா
உனைப் புகழ்வது?

பன்மடங்கு
புண்ணியமளிக்கும்
ரமலானை
எமக்குக்
கடமையாக்கினாய்!

உன் அடியாரின்
நல்வினைகட்கு
உன் வற்றாத
அருட்கொடையால்
நிறையாக்கினாய்!

பசியறியாதிருந்தோரை
பசியுணர வைத்தாய்!
பசித்திருந்தோரை
நிறைவாய்ப்
புசிக்க வைத்தாய்!

ஈகையும் மார்க்கவரியும்
கட்டாயமாக்கி
இருப்போர் கொடுக்கவும்
இல்லாதோர் பெறவும்
வழியமைத்துக் களிப்பளித்தாய்!

ரமலானை
எமக்களித்து
வையத்தில்
நல்லறத்தைத்
தழைக்க வைத்தாய்!

'ஈகைத் திருநாள்' மூலம்
ஏழையின் சிரிப்பில்
உன்னைக் காணவைத்த
எம் இறைவா!
அகிலத்தின் புகழனைத்தும் உனக்கே!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.

 
m
 

இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள்

 முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.