........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:168

ஒருகனமேதும் நினைப்பாயோ?

உதடுகள் சொல்ல 
நினைக்கும் வார்த்தைகளைவிட
மௌனத்தால் நீபேசும் 
மொழிகளுக்கே சக்திஅதிகம்... ...

வாய் வார்த்தைகளைவிட உன் 
கண்கள் பேசும் 
வார்த்தைகளுக்கே சக்திஅதிகம்... ...

கைகளால் எழுதும் 
வார்த்தைகளைவிட உன் 
காதல்கடிதங்கள் பேசும்
வார்த்தைகளுக்கே சக்திஅதிகம் ... ...

இமைகள் துடிக்க மறந்தாலும்
என் கண்கள் உன்னை
பார்க்க மறப்பதில்லை
வார்த்தைகள் வராமல்
பேச மறுத்தாலும்
என் நெஞ்சம் உன்னை
நினைக்க மறப்பதில்லை ... ...

உடல் - உள்ளம் வேறு
என்றாலும் உயிர் ஒன்றே 
இரவு பகலென பாராது
உன்னையே நினைக்கும்
இந்த காதல்பித்தனை
ஒருகனமேதும் நினைப்பாயோ
என் அன்பே... ...!

-த.சத்யா, இராஜபாளையம்.

 
m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.