........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:171

செங்கல்லா கனக்குதடி... 


செல்லமா, சிணுங்கலா
சிரிச்சுப் பேச நீ அழைச்சா
மெல்லிசையால என்னிடம்
மெதுவாக சொல்லிவிடும்!

'சுள் 'ளுன்னு கோபத்தோட
சூடாகி நீ கத்தினா
பொல்லாப்பு வேணாம்னு
'பொசுக் 'குன்னு ஆப் ஆகும்!

சொல்லாம என்னைப் பார்க்க- நீ
தூரத்தில் வரும்போதே
துள்ளலிசை அலாரத்தால் என்
தூக்கத்தைக் கலைத்து விடும்!

வெள்ளமா வந்து விழும்
வேண்டாத குறுந்தகவல்களைத்
தள்ளி விட்டு, நீ அனுப்பும்
வெல்லக்கட்டி சொல்லை மட்டும்
சல்லடைபோல் சலித்தெடுத்து
உள்ளுக்குள்ள சேர்த்து வைக்கும்!

மல்லிகையே, மரிக்கொழுந்தே
பல்லக்கேன்னு எல்லாம் - பொய்
சொல்லி சொல்லி அலுத்துப் போய்
சும்மா விளையாட்டுக்கு- நான்
வில்லங்கமாக் கேலிப்பேச...

விளங்கிக்காம என்கிட்ட
மல்லுக்கு நின்னுகிட்டு- நீ
மாசக்கணக்காப் பேசாததால
செங்கல்லா கனக்குதடி-என்
செல்போன்!!!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்.

 
m

 

பனசை நடராஜன் அவர்களது பிற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.