........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:186

கலகமில்லா உலகம் காண்போம்!

"உறவுகள்" ஆதாம் ஏவாள் 
ஆரம்பித்த உறவுகள்
சாத்தான் புகுந்து சாய்த்தான். 
அதனால் - பிரிவுகள்
அண்டை வீட்டோடும்
அண்டை நாட்டோடும்
சண்டை போட்டே 
மண்டை ஓட்டை
மலிவாக்கினோம்....

உறவு ஓர் அதிசய மரம்:
உள்ளன்பே அதன் உரம்;
உதவும் கரம் தான் உண்டு
அதனைத் தாங்கும் தண்டு;
அன்பு ஊற்று தான்
இன்பக் காற்று தரும் இலைகள்.
உறவுக்கு மறுபெயர் "கிளைகள்"
உட்காரட்டும் பாசப்பறவைகள்....
உணர்வு தான் ஆணி வேர்.
உணவு அதற்கு உளமார மன்னிக்கும். 

நற்குணமேசட்டை பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டும் உறவுகள்.
சற்றே நிலை மாறினால்
சட்டை செய்யாது 
திசை மாறும் பறவைகள் 
விலா எலும்பின் விலாசம் காண
விவாக உறவுகள்
உயிர் காக்கும்
உண்மைத் தோழமை
உயிருள்ள வரை மறவா உறவு
தொப்புள் கொடியாய்த்
தொடரும் இரத்த உறவு
ஆயிரம் உறவுகளிருந்தாலும்
தாயும்-தந்தையும் தன்னேரில்லா உறவு

கற்ற கல்வி
உற்ற நண்பனாய் உதவும் உறவு
நற்செயல்கள் என்னும் உறவே நம்மோடு
நடந்து வரும் இடுகாடு
இவ்வுறவைப் பேண
இறுதிவரைப் போராடு 
எல்லா உறவுகளும்
நில்லா உலகோடு நின்றுவிடும்.

எல்லாம் வல்ல இறைவனிடம்
எல்லா நேரமும் அடியான் கொண்ட "உறவு"
எல்லா துன்பங்களையும் வென்றுவிடும்.
எல்லா உறவுகளையும் பேணுவோம்
எல்லார்க்கும்- இறையோனுக்கும்
பகைவனான சாத்தானைப்
பகைத்திடுவோம்- அதனால்
கலகமே இல்லாத
உலகமேக் காணுவோம்.! 

-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்.

 
m

 

கவியன்பன் கலாம் மற்ற படைப்புகள்

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.